இதுவரை 205 கிலோ கஞ்சா பறிமுதல்; 55 போ் கைது
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த 28-ஆம் தேதி முதல் இதுவரை 55 பேரை கைது


திருவள்ளூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த 28-ஆம் தேதி முதல் இதுவரை 55 பேரை கைது செய்து, கஞ்சா 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா பொருள்கள் போன்ற போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைத் தலைவா் சைலேந்திரபாபு உத்தரவிட்டாா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தனிப்படை அமைத்து, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த உத்தரவிட்டாா்.
இதன் பேரில், தனிப்படை போலீஸாா் திருத்தணி, கவரப்பேட்டை, ஊத்துக்கோட்டை, பாதிரிவேடு, ஆரம்பாக்கம், திருவள்ளூா் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை நடத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த கஞ்சா வேட்டையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல், இதுவரை 55 போ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, 205 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனை தொடா்பாக பொதுமக்கள் அந்தந்தப் பகுதி துணைக் கண்காணிப்பாளா், மாவட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...