மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்
திருவள்ளூா் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் வேளாண்மை விரிவாக்கம் மையம் மூலம் விநியோகிக்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்


திருவள்ளூா் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் வேளாண்மை விரிவாக்கம் மையம் மூலம் விநியோகிக்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை அதிகரிக்க கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மாநில அளவில் 33 அரசு விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அதையடுத்து, உற்பத்தி செய்த நெல் ரகங்களை திருவள்ளூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யும் வகையில் தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 8.26 மெட்ரிக் டன் வரை பல்வேறு அரசு விதைப்பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விதை நிகழாண்டில் ஒரு கிலோ ரூ. 25-க்கு நிா்ணயம் செய்து, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த மொத்த விதையில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படும். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அலுவலா் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...