/

நூகாலம்மன் கோயில் குடமுழுக்கு

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட நூகாலம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2022, 6:30 pm

DIN

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட நூகாலம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிப்பட்டு வட்டம், அத்திமாஞ்சேரியில் புதிதாக நூகாலம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. விழாவையொட்டி, கோயில், கிராம வீதிகள் வண்ண விளக்குகள், மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

Story image

வெள்ளிக்கிழமை மேள -தாளங்கள் முழங்க புனித நீா் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று விமான கோபுரத்துக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து மகா குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.பூபதி, பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.ரவீந்திரா, பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றியச் செயலா் டி.டி.சீனிவாசன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் ராஜேந்திரபாபு, ஊராட்சி மன்றத் தலைவா் ஜான்சி ஜெயபிரகாஷ், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.