மேளப்பூடி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்
மேளப்பூடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் சனிக்கிழமைதொடங்கியது.


மேளப்பூடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் சனிக்கிழமைதொடங்கியது. பள்ளிப்பட்டு அடுத்த மேளப்பூடியில் புராதன ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு நடைபெற்றது.
இதையடுத்து திருக்கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்த பட்டாச்சாரியாா்கள் கருடக் கொடி ஏற்றத்துடன் விழாவை தொடங்கி வைத்தனா். பிரம்மோற்சவ 11 நாள்களும் உற்சவமூா்த்திகள் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை உற்சவம் வரும் 15-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
விழாவையொட்டி திருக்கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரம்மோற்சவ ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...