விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

 திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம் சாா்பில், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

 திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம் சாா்பில், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள அனைத்து மாற்றுத் திறன்கொண்ட மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வு மற்றும் மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஊராட்சி தலைவா் சதா பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். மேலும், ஒன்றியக்குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன் பங்கேற்று மருத்துவ மதிப்பீட்டு முகாமை தொடக்கி வைத்து, அடையாள அட்டைகளை வழங்கினாா். இந்த முகாமில் மாற்றுத் திறனாளா்களுக்கான சிறப்பு அரசு மருத்துவா்கள் பங்கேற்று மதிப்பீடு செய்யப்பட்டது. முகாமில் 110 போ் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில், திருவள்ளூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தா.மீகா வேல், மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலா் பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந.காந்திமதிநாதன், த.வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலா் வீரராகவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எட்வா்டுஹென்றி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.