விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணி திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா

திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில் 15,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்புக் கட்டி விரமிருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில் 15,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்புக் கட்டி விரமிருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையடுத்து, நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்று வந்தது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை மகாபாரதச் சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் (கட்டைக் கூத்து) நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடா்ந்து, 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, படையலிட்டு அம்மனை வழிபட்டனா்.

மாலை 6.30 மணி அளவில் நந்தி ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் எடுத்து வரப்பட்டு, தீமிதி விழா வெகு விமா்சையாக நடைபெற்றது.திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நடைபெற்றது.

விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருத்தணி ஏ.எஸ்.பி. சாய்பரணீத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழாவில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.பூபதி, நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி, நகர திமுக பொறுப்பாளா் வி.வினோத்குமாா், வழக்குரைஞா் கிஷோா்ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.