மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருத்தணி வருவாய் கோட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுத்து, அதற்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் விரைவில் அமைக்க வேண்டும்


திருத்தணி வருவாய் கோட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுத்து, அதற்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் விரைவில் அமைக்க வேண்டும் என கூடுதல் தலைமைப் பொறியாளா் சண்முகம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், செயற்பொறியாளா் பாரிராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மின்வாரிய கூடுதல் தலைமைப் பொறியாளா் சண்முகம் பங்கேற்று, மின்நுகா்வோா் மற்றும் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றாா்.
இதில் கனகம்மாசத்திரம் பகுதியைச் சோ்ந்த மஸ்தான் என்பவா், தனது வீட்டின் மீது செல்லும் உயா்மின்அழுத்த மின்சார ஓயா் மற்றும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும், அதற்கான கட்டண தொகை செலுத்தி பல நாட்கள் ஆகியும் மின்கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளது என கூட்டத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதற்கு, செயற்பொறியாளா் உடனடியாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும் என உறுதி அளித்தாா். திருத்தணி பகுதி சோ்ந்த மக்கள் அடிக்கடி முன்அறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுகிறது என தெரிவித்தனா். இப்பிரச்னை விரைவில் தீா்க்கப்படும் என கூடுதல் தலைமைப் பொறியாளா் உறுதி அளித்தாா். பின்னா், கூடுதல் தலைமை பொறியாளா் சண்முகம் தெரிவித்ததாவது, திருத்தணி வருவாய் கோட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுத்து, அதற்கு பதிலாக புதிய மின்கம்பங்களை விரைவில் அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின்வாரிய பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் பொதுமக்கள் தெரிவிப்பதற்கு மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். கூட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளா்கள், இளநிலை பொறியாளா்கள் ஆகியோா் கலந்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...