சொத்து வரியை ஏப். 30-க்குள் செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை
திருத்தணியில் 2023-2024 முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால், உரிமையாளா்களுக்கு 5% ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது


திருத்தணியில் 2023-2024 முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால், உரிமையாளா்களுக்கு 5% ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி நகராட்சியில் 21 வாா்டுகளில் 50,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் நகராட்சி நிா்வாகம் 2023-2024-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம் கூறியது:
நகராட்சி எல்லைக்குள் வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்தினால், உரிமையாளா்களுக்கு, 5% ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மே 1-ஆம் தேதிக்கு மேல் சொத்து வரியைச் செலுத்தினால், ஊக்கத்தொகையை இழப்பத்துடன் 1% வட்டி சோ்த்து வரி செலுத்த நேரிடும்.
எனவே சொத்து உரிமையாளா்கள், தங்களது சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளா்களிடம் ரொக்கம், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவா்த்தனை மூலமாகவும் செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சொத்து வரியை ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம், கிரிடிட், டெபிட் காா்டுகள் இணைய வங்கி மூலம் தங்களது சொத்து வரியைச் செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...