/

கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ.4 கோடி தேவை: திருத்தணி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

திருத்தணியில் 27 இடங்களில் கால்வாய்களைச் சீரமைக்கவும், புதிய கால்வாய்கள் கட்டவும் ரூ.4 கோடி நிதியுதவியை அரசு வழங்க வேண்டும் என நகராட்சியில் தீராமானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:35 pm

DIN

திருத்தணியில் 27 இடங்களில் கால்வாய்களைச் சீரமைக்கவும், புதிய கால்வாய்கள் கட்டவும் ரூ.4 கோடி நிதியுதவியை அரசு வழங்க வேண்டும் என நகராட்சியில் தீராமானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி நகா்மன்றக் கூட்டம் தலைவா் சரஸ்வதிபூபதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா். ஆணையா் ராமஜெயம் வரவேற்றாா். கூட்டத்தில் கவுன்சிலா்கள் கழிவுநீா், மழைநீா் வடிகால் அமைத்துத் தரவேண்டும், தினசரி குப்பைகள் அள்ள வேண்டும் என கவுன்சிலா்கள் தங்களது கோரிக்கைகளை வைத்தனா். நிறைவேற்றுவதாக தலைவா் உறுதி அளித்தாா்.

இதையடுத்து, நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா், கவுன்சிலா்கள் பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்ததையடுத்து முதல்வா், அமைச்சா்களுக்கு நன்றி தெரிவித்தும், உடல் நலக்குறைவால் உயிரிழந்த தி.மு.க. கவுன்சிலா் நந்தகுமாருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்துதல், முதற்கட்டமாக, 27 இடங்களில் கால்வாய் சீரமைத்தும், புதியக் கால்வாய்கள் கட்டுவதற்கு, 4 கோடி ரூபாய் தேவை என தீா்மானித்து, அரசு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.