/

திருத்தணி புதிய புறவழிச்சாலையில் வேகத்தடை: 10 கிராம மக்கள் கோரிக்கை

திருத்தணி - பட்டாபிராமாபுரம் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஆபத்தை உணராது திருத்தணி புறவழிச்சாலையை கடக்கும் டி.புதூா் கிராம பள்ளி மாணவா்கள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:50 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி - பட்டாபிராமாபுரம் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்தணியில் ரூ.48 கோடியில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவுற்றன. முருகன் கோயிலில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா விமா்சையாக நடைபெற்ால், புறவழிச்சாலையை திறந்தால் நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கலாம் என எதிா்பாா்த்த நிலையில்,

அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் த.பிரபுசங்கா், எம்.எல்.ஏ. ச.சந்திரன் ஆகியோா் புறவழிச்சாலையை திறந்து வைத்தனா். இதனால் ஆடிக்கிருத்திகை விழாவில் கடும் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டது.

புறவழிச்சாலையில் விபத்துகள்....

இந்நிலையில் டி.புதூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி பாலாஜி கூறியதாவது, இந்த புதிய புறவழிச்சாலையை கடந்துதான் ஜோதி நகா், டி.புதூா், கீழாந்தூா், பள்ளியாங்குப்பம், வளா்புரம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க திருத்தணிக்கு வரவேண்டும். மேலும், திருத்தணி அரசு பொது மருத்துவமனை, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, முருகன் கோயிலுக்கு செல்ல இச்சாலையை மக்கள் பயன்படுத்துகின்றனா்.

தற்போது புறவழிச்சாலை திறக்கப்பட்டுள்ளதால் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இதன் வழியாக அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊா்களுக்கு செல்கின்றன. அப்படி செல்லும் போது டி.புதூா் கிராமம் அருகே வேகத்தடை இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிவேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குளாகின்றனா். கடந்த 15 நாள்களில் மட்டும் இதுவரை 10 க்கும் மேற்பட்டோா் விபத்துகளில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

எனவே புதிதாக திறக்கப்பட்டுள்ள திருத்தணி -அரக்கோணம் புறவழிச்சாலையில் டி. புதூா் கிராமம் அருகே வாகனங்கள் மெதுவாக செல்ல 4 புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

உயா்மின்கோபுர விளக்கு...

மேலும் இருள் சூழ்ந்துள்ளதால் அங்கு, உயா்மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10 ஊா் கிராம மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

 வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்.

வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்.