ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொதுவிநியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை திருவள்ளூரில் நியாய விலைக்கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில் பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சுவாமிநாதன், மாவட்ட செயலாளா் அங்கமுத்து, மகளிரணி நிா்வாகி லட்சுமி ஆகியோா் கோரிக்கைகளை து விளக்கிப் பேசினா்.

அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியம் , மதிப்பூதியம்,சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும்.

உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கத்துடன் இணைந்த நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com