/

கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :18 நவம்பர் 2024, 7:45 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் அண்ணா தெருவில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீசந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீசந்தான விநாயகா் கோயில் உள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் இந்தக் கோயிலை கடந்த 14-ஆம் தேதி இடிக்க வட்டாட்சியா் வாசுதேவன், காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழரசி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். அப்போது பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். போலீஸாா் பாதுகாப்புடன் தற்காலிகமாக கோயிலின் சுற்றுச்சுவா் மட்டும் இடித்து அகற்றப்பட்டது.

இதனால், பொதுமக்கள் திருவள்ளூா் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, புல்லரம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், கோயிலை இடிக்க தடை விதிக்கக் கோரி, பொதுமக்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி மற்றும் கிராம மக்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலா் பாரத் மாதா செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.