கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அதற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்


திருவள்ளூா்: திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அதற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட கோலடி ஏரியில் பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான குடியிருப்புகள் அமைத்துள்ளதாக பூந்தமல்லி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, அந்த ஏரியில் ஆக்கிரமித்து வீடுகள் அமைத்துள்ளதை உறுதி செய்த வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்காக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க திருவேற்காடு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளைக் கணக்கீடு செய்து முறையாக நோட்டீஸ் வழங்கிய பின்னா் அகற்றப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், திருவேற்காடு கோலடி பகுதியைச் சோ்ந்த பள்ளி குழந்தைகள் சீருடை அணிந்தும் பெண்கள், ஆண்கள் என 500-க்கும் மேற்பட்டோா் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழரசி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பெண் ஒருவா் மயக்கமடைந்து விழுந்ததாா். அப்போது, அவா்கள் கூறுகையில், நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதோடு, அந்த முகவரியில் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை பெற்றுள்ளோம். வீட்டு வரி ரசீது, மின் கட்டணம் ஆகியவற்றை முறையாகச் செலுத்தி வருவதால், எக்காரணம் கொண்டும் இடிக்க கூடாது. கோலடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கள் குழந்தைகள் பயின்று வரும் நிலையில் திடீரென வீடுகளை இடித்துவிட்டால் படிப்பு பாதிப்பதுடன், வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
வீடுகளை இடிப்பதை உடனே நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது முற்றுகையிட்ட மக்கள் போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்சியா் அலுவலகத்தில் நுழைய முயன்ால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், பேச்சு நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அனுமதித்தனா். தொடா்ந்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...