செல்லாத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா.சம்பத்.
செல்லாத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா.சம்பத்.

சமத்துவ பொங்கல் விழா: போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

செல்லாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா.சம்பத் பரிசு வழங்கினாா்.
Published on

செல்லாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா.சம்பத் பரிசு வழங்கினாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், செல்லாத்தூா் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா.சம்பத் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் சமத்துவப் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து நடைபெற்ற கோலப் போட்டி, ஓட்டப் பந்தயம், கபடி, உரியடித்தல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 15,000-ம், 2-ஆம் பரிசாக ரூ. 10,000-ம், 3-ஆம் பரிசாக ரூ. 7,500, ஆறுதல் பரிசாக ரூ. 5,000-ம் ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளா் செல்லாத்தூா் பா.சம்பத் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக உறுப்பினா்கள் நாகப்பன், பாலு, வெங்கடேசன், வழக்குரைஞா் ரகு, ரவி, ராஜேந்திரன், ரஜினிகாந்த், பாஸ்கா், கடிகாசலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com