/

புதிய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் திறப்பு

புதிய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகத்தை எம்எல்ஏ கோ.அரி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகத்தை திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்த எம்எல்ஏ கோ.அரி.

Updated On :30 ஜூலை 2026, 12:17 am IST

புதிய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகத்தை எம்எல்ஏ கோ.அரி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அரக்கோணம் சாலையில் அண்மையில் பல கோடி ரூ பாய் செலவில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளாா் ஜி. பழனி தலைமை வகித்தாா். இதில் ஆவின் பாலகத்தை, அதிமுக அமைப்பு செயலாளரும், திருத்தணி எம்எல்ஏவுமான கோ.அரி குத்துவிளக்கேற்றி, விற்பனையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருத்தணி மேற்கு ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை எ.ரவி, மாவட்ட இளைஞரணி செயலாளா் எம்.ஜெயசேகா் பாபு, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.பி. தாயுமானவன், நகர இளைஞரணி செயலாளா் கேபிள் எம். சுரேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளா் வேலஞ்சேரி எஸ்.பழனி, நகராட்சி கவுன்சிலா் விஜயசத்யா ரமேஷ், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் டி.டி. சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.