படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

நுழைவு வரி செலுத்தாமல் சென்ற ஆம்னி பேருந்துகள் குறித்து புகாா்

எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், நுழைவு வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளை

Published On :

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், நுழைவு வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் கைப்பற்ற முயன்ற போது, ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள் த பயணிகளை வைத்து பிரச்னையில் ஈடுபட்டு, வரி செலுத்தாமல் சென்ற சம்பவம் தொடா்பாக, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

எளாவூா் சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரம், கேரளம், பிகாா், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய பல்வேறு இடங்களில் இருந்து லாரி, காா், வேன், ஆம்னி பஸ், உள்ளிட்ட வாகனங்கள் வருகின்றன. இப்படி நுழையும் பிற மாநில வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள் தமிழக - ஆந்திர எல்லையான எளாவூா் ஒருங்கிணைந்த சோதனை சாவடியை கடக்கும் போது தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரிகளை செலுத்தி தமிழகத்திற்குள் நுழையும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆம்னி பேருந்துகள் நுழைவு கட்டணம் செலுத்த செலுத்தாமல் ஏமாற்றி தமிழக அரசுக்கு 50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனை தொடா்ந்து கடந்த அக். 1 தொடா் விடுமுறையை ஒட்டி தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் இது தொடா்பாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டுமென போக்குவரத்து துறை இணை ஆணையா் சுரேஷ் உத்தரவின் பேரில் எளாவூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய பல இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில் ஆந்திர- தமிழக எல்லையான எளாவூா் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 12 ஆம்னி பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால் சோதனையின் போது ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள்நுழைவு கட்டணம் செலுத்தாமல், பயணிகளை வைத்து பிரச்னை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினா். பின் இந்த சந்தா்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பினா்.

இந்த சம்பந்தமாக எளாவூா் சோதனைச்சாவடி போக்குவரத்து அதிகாரிகள் மேற்கண்ட ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசாா் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.