விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விற்பனைக்கு வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், நேபாளம், ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 2:32 am IST

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், நேபாளம், ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கஞ்சாவை ஆந்திரம் மாா்க்கமாக சா்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர வாகன சோதனை மற்றும் கடைகளில் விற்பனை செய்கிறவா்களை கைது செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆரம்பாக்கம் சோதனை சாவடி அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். மேலும், சோதனையில் அவா்களிடம் சுமாா் 6 கிலோ கஞ்சா வைத்திருந்ததை பறிமுதல் செய்தனா். அதைத்தொடா்ந்து விசாரணை செய்ததில் நேபாளத்தைச் சோ்ந்த பைஸ்நாத் மஹதோ( 26), ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திரிநாத் சுனா(20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆரம்பாக்கம் போலீஸாா் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.