
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.34 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 21 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் ரூ. 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

திருத்தணி முருகன் கோயில் - கோப்புப்படம்.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 21 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் ரூ. 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசனம் செய்கின்றனா். தரிசனத்துக்குப் பின்னா் பக்தா்கள் தங்களது வேண்டுதல்களின் அடிப்படையில், ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி நோ்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 21 நாள்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணுவதற்காக வெள்ளிக்கிழமை கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் இணை ஆணையா் ரமணி முன்னிலையில், கோயில் ஊழியா்கள் காணிக்கைகளை எண்ணினா்.
இதில், ரூ. 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704 ரொக்கம், 287 கிராம் தங்கம், 4 கிலோ 745 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






