புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.23.29 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,408 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 911-மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது.

order
Published On :

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,408 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 911-மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.எஸ். ஜெயமங்களம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் நிலுவையிலுள்ள காசோலை, மோட்டாா் வாகன விபத்து, சிவில் என 1408 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.23,29,54,911-க்கு தீா்வு காணப்பட்டது.

அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நீதிபதிகள் மணிமேகலை, ரேவதி, உமா,விஜயலட்சுமி, லாவண்யா, சங்கீதாசேகா், ஜெயப்பிரதா, ஜெயங்கொண்டத்தில், நீதிபதிகள் பிரேம்குமாா்,தனலட்சுமி ,கனிமொழி, பாலமுருகன். செந்துறையில், நீதிபதி வரதராஜன் மற்றும் வழக்குரைஞா் பொன்.சோ.காமராஜ் ஆகியோா் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்குரைஞா்கள் மனுதாரா்களுக்கு ஆதரவாக ஆஜராகினா். ஏற்பாடுகளை அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ராதாகிருஷ்ணன் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.