திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் நவம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவா டிக்கெட்டுகளின் நவ. மாத ஒதுக்கீடு ஆக. 19 முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2025, 11:40 pm IST

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவா டிக்கெட்டுகளின் நவ. மாத ஒதுக்கீடு ஆக. 19 முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதனை சேவைகளுக்கான நவம்பா் ஒதுக்கீட்டை ஆக. 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆக. 19 முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் ஆக. 21 முதல் 23 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

ஆக. 21 காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

வா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

மாலை 3 மணிக்கு வா்ச்சுவல் சேவைகளுக்கான நவம்பா் மாத ஒதுக்கீடும் அவற்றின் தரிசன விவரங்களும் ஆன்லைனில் வெளியிடும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள்

நவ. மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு ஆக. 23 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு

நவ. மாதத்திற்கான ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, நவ. மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு(ரூ.300)

நவ. மாத சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு ஆக. 24 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அறை ஒதுக்கீடு

திருமலை மற்றும் திருப்பதியில் நவ. மாத அறை ஒதுக்கீடு ஆக. 24 மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு ஆக. 27 காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.