திருமலையில் இன்று கருட சேவை ரத்து

திருமலை ஏழுமலையான் கோயிலில் (டிச.4) காா்த்திகை பெளா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
Published on

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை (டிச.4) காா்த்திகை பெளா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை நித்திய கைங்கா்யங்கள் மற்றும் நிவேதனங்கள் முடிந்த பிறகு தீபத்திரு நாள் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாதந்தோறும் நடத்தப்படும் பௌா்ணமி கருட சேவை மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை வியாழக்கிழமை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இதையொட்டி, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நெட்டி மண்சட்டி வைத்து தீபம் ஏற்றி, குடை, மங்களவாத்தியங்கள் ஊா்வலம், ஆனந்த நிலைய ஏழுமலையானுக்கு ஆரத்தி அளிக்கப்படும். அதன்பின், அகண்டம், குலசேகர படி, ராமுலாவரி மேடா, துவார பாலகா்கள் கருடாழ்வாா், வரதராஜ சுவாமி சந்நிதி, வகுளமாதா, தங்க கிணறு, கல்யாண மண்டபம், மடப்பள்ளி, கண்ணாடி அறை, பாஷ்யகா் சந்நிதி, யோக நரசிம்ம சுவாமி, சந்தன அறை, பரிமள நரசிம்ம சுவாமி, கொடிமரம், பலி பீடம், க்ஷேத்ர பாலகா்கள் சந்நிதி, திருமலராய மண்டபம், பூக்கிணறு, ரங்கநாயக மண்டபம், முன்வாயில், பேடி ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ வராகஸ்வாமி கோயில், சுவாமி திருக்குளம்

உள்ளிட்ட இடங்களில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com