திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்:
பிப்.8-இல் தொடக்கம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

திருப்பதியில் சேஷாசல மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப். 8 முதல் 17 வரை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Published on

திருப்பதியில் சேஷாசல மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப். 8 முதல் 17 வரை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் கபில தீா்த்தக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி வரும் பிப்.8-இல் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, பிப். 7 -ஆம் தேதி அங்குராா்ப்பணம் நடைபெறும். 4-ஆம் தேதி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

வாகன சேவைகள் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளன.

வாகன சேவைகளின் விவரம்

8-02-2026: காலை - கொடியேற்றம், இரவு - அன்ன வாகனம், 9-02-2026: காலை - சூா்யபிரபை வாகனம், இரவு - சந்திரபிரபை வாகனம்,

10-02-2026: காலை - பூத வாகனம், இரவு - சிங்க வாகனம், 11-02-2026: காலை - மகர வாகனம், இரவு - சேஷ வாகனம், 12-02-2026: காலை - திருச்சி வாகனம், இரவு - அதிகாரநந்தி வாகனம், 13-02-2026: காலை - புலி வாகனம், இரவு - யானை வாகனம், 14-02-2026: காலை - கல்பவிருக்ஷ வாகனம், இரவு - குதிரை வாகனம், 15-02-2026: காலை - தோ் திருவிழா (போகிதேரு) இரவு - நந்தி வாகனம், 16-02-2026: காலை -புருஷம்ருக வாகனம், மாலை - கல்யாணோற்சவம், இரவு - திருச்சி வாகனம், 17-02-2026: காலை - திரிசூலக்குளியல், மாலை - கொடியேற்றம், இரவு - ராவணாசுர வாகனம்.

வாகன சேவையின் போது, தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் வாகன சேவைகளுக்கு முன்னால் கோலாட்டங்கள் மற்றும் பஜனைகள் நடைபெறும். அன்னமாச்சாா்யா திட்டக் கலைஞா்கள் அன்னமய்ய சங்கீா்த்தனங்களைப் பாடுவாா்கள்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேவஸ்தானம் அந்நாள்களில் பல சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com