லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.46 கோடி

News image
Updated On :5 மார்ச் 2026, 12:00 am

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை சந்திரகிரகணத்தை முன்னிட்டு காலை 9 மணிமுதல் மாலை 7.30 மணிவரை மூடப்பட்டது. கிரகணம் நிறைவு பெற்று சுத்தி, புண்ணியா வசனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு இரவு 8.30 கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 10 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 27,200 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 9, 987 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.