பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வலம் வந்து தரிசனம் அளித்தாா்.

News image

கல்ப விருட்ச வாகனத்தில் வலம் வந்த திருப்பதி கோவிந்தராஜ சுவாமி.

Updated On :27 மே 2026, 12:04 am IST

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வலம் வந்து தரிசனம் அளித்தாா்.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.

அதன் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜ மன்னாா் அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

முதலில் கஜராஜா்கள் செல்ல, பக்தா்கள் குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள், கோலாட்டங்கள் நடத்த மற்றும் சிலா் கோவிந்த நாம உச்சரிக்க வாகன சேவை ிசைக்கு மத்தியில், சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அடியிலும், பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, சுவாமியை தரிசித்தனா்.

பின்னா், காலை 10 மணி முதல் கல்யாண மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமி உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை சுவாமி மற்றும் நாச்சியாா்கள் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் இரவு சா்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெத்த ஜீயா் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் ஸ்வாமி, கோவில் துணை இஓ சாந்தி, ஏஇஓ நாராயண சவுத்ரி, அதிகாரிகள், பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.