நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி, அரிமா சங்கங்கள் சார்பில் நீரிழிவு, டெங்கு நோய் விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி, அரிமா சங்கங்கள் சார்பில் நீரிழிவு, டெங்கு நோய் விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்க வந்தவாசி கிளைத் தலைவர் மருத்துவர் எஸ்.எம்.அப்துல்குத்தூஸ் கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கிவைத்தார். வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்றது.
ஊர்வலத்தில் மருத்துவர்கள் ஐ.ராமலிங்கம், எஸ்.குமார், பஷீர்அகமது, ஸ்ரீதரன், சங்க நிர்வாகிகள் எ.எஸ்.எ.ரவி, எட்டியப்பன், பள்ளித் தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com