ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு
போளூர் அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்தார்.


போளூர் அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்தார்.
போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் புகழ்கதிரவன் (24). இவர், வெள்ளிக்கிழமை காலை மது அருந்திவிட்டு காதொலி கருவி மூலம் செல்லிடப்பேசியில் பாடல் கேட்டபடி அந்தக் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தாராம்.
அப்போது, திருப்பதி - ராமேஸ்வரம் இடையே செல்லும் பயணிகள் ரயில் ஓலி எழுப்பியபடி தண்டவாளத்தில் வந்துள்ளது. எனினும், இந்த ஒலி கேட்காமல் அமர்ந்திருந்த புகழ்கதிரவன் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ரயில் ஓட்டுநர் திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த விழுப்புரம் ரயில்வே போலீஸார், புகழ்கதிரவனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...