அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் சாவு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென இறந்தார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென இறந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது மனைவி நித்யா (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நித்யா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் இரவு அறுவைச் சிகிச்சை மூலம் நித்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். தகவலறிந்த நித்யாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து, மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நித்யாவின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கினர். அப்போது, நித்யாவைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடும் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை என்பதை தெரிவித்தனர். இதையடுத்து, நித்யாவின் உறவினர்கள் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com