இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

வேட்டவலம் அருகே  7 ஆடுகள் மர்மச் சாவு

வேட்டவலம் அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து காவல் துறை, கால்நடைத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Updated On :8 ஜூன் 2018, 1:33 am IST

வேட்டவலம் அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து காவல் துறை, கால்நடைத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேட்டவலத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (55). இவர், தனக்குச் சொந்தமான 20 செம்மறி ஆடுகளை நிலத்தில் உள்ள கொட்டகையில் புதன்கிழமை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
வியாழக்கிழமை காலை சண்முகம் திரும்பி வந்து பார்த்தபோது, கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 7 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மேலும், 5 ஆடுகளின் தொடைப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டது போன்ற காயம் ஏற்பட்டிருந்தது. தகவலறிந்த ஆவூர் கால்நடை மருத்துவர் மற்றும் வேட்டவலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆடுகள் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.