மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னிந்திய குங்ஃபூ போட்டி: ஆரணி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய அளவிலான குங்ஃபூ போட்டியில் ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:43 am

DIN

தென்னிந்திய அளவிலான குங்ஃபூ போட்டியில் ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
2018-ஆம் ஆண்டுக்கான 3-ஆவது தென்னிந்திய அளவிலான மூவாபோரான் சாம்பியன்ஷிப் குங்ஃபூ போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எம்.முகிலன், வி.ஜெக
ஜீவசந்திராயன், எம்.சரண், 
டி.ஆகாஷ், பி.எஸ்.அரிகேசன், பி.கோகுலகிருஷ்ணன், ஏ.ஆர்.திலீபன், டி.ருத்ரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.
மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த பி.சஞ்சய், என்.ஜெயசூர்யா, ஏ.திவாகர் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளர் மதன்தனசேகரையும் பள்ளியின் கூடுதல் தாளாளர் சித்ரா, நிர்வாக ஆலோசகர் கவிதா, பள்ளி முதல்வர் ஐ.ஜான்மர்லின்இன்பகுமார் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.