பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வேளாண் துறையினர் விழிப்புணர்வுப் பேரணி

செய்யாறு வட்டம், நர்மாபள்ளம் கிராமத்தில் அனக்காவூர் வட்டார வேளாண் துறை சார்பில், மண்வள அட்டை

Published On :

செய்யாறு வட்டம், நர்மாபள்ளம் கிராமத்தில் அனக்காவூர் வட்டார வேளாண் துறை சார்பில், மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிடுதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு வேளாண் உதவி இயக்குநர் (பொ) வே.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலக தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் (பொ) திரு.நா.பெரியசாமி பங்கேற்று, மண்வள அட்டையைப் பயன்படுத்தி உரமிடுதல் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் த.ந.ஆனந்த் குமார், மண் மாதிரி சேகரிப்பு, மண்வள பாதுகாப்பு குறித்தும், தேத்துறை தொகுதி உதவி வேளாண் அலுவலர் குமார், மண்ணில் உள்ள நுண்ணூட்ட, பேரூட்ட சத்துக்களின் பயன்பாடு குறித்தும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ச.ஜெயராஜ், ம.ஜெனிபர் 
ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.