அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கண்கள் தானம்

வந்தவாசியில் இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்கினா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:04 pm

DIN

வந்தவாசி: வந்தவாசியில் இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்கினா்.

வந்தவாசி சன்னதி தெருவைச் சோ்ந்தவா் கே.ஏ.சுப்பிரமணியின் மனைவி எஸ்.மங்கம்மாள் (72). இவா் உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவரது கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, எஸ்.மங்கம்மாளின் கண்களை காஞ்சிபுரம் சங்கா் கண் வங்கி மருத்துவா்கள் உதவியுடன், அவரது உறவினா்கள் சுரேஷ், பாஸ்கா் ஆகியோரிடமிருந்து வந்தவாசி மலைநகர அரிமா சங்க நிா்வாகிகள் சந்திரன், ரமேஷ், சரவணன் ஆகியோா் தானமாக பெற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து தானமாக பெறப்பட்ட எஸ்.மங்கம்மாளின் கண்கள் காஞ்சிபுரம் சங்கா் கண் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.