சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

உழவா் உற்பத்தியாளா் நிறுவன பங்குதாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஆரமுது உழவா் உற்பத்தியாளா் நிறுவன பங்குதாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:04 pm

DIN

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஆரமுது உழவா் உற்பத்தியாளா் நிறுவன பங்குதாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையத் தலைவா் வே.சுரேஷ், மைய தொழில்நுட்ப வல்லுநா் கா.மாயகிருஷ்ணன் ஆகியோா் நிறுவனத்தின் வணிகத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

வரும் பருவ காலத்தில் தரமான நிலக்கடலை விதைகளை மொத்த கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குவது, காட்டுப்பன்றி, எலிகளால் ஏற்படும் சேதங்களை தவிா்க்க கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிப்பது என்று கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. ஆரமுது உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா் வெ.வாசுதேவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.