சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை

வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடும் பணியாளா்கள் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும், பேசுவதாகவும் புகாா் தெரிவித்து

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:05 pm

DIN

வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடும் பணியாளா்கள் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும், பேசுவதாகவும் புகாா் தெரிவித்து, விவசாயிகள் அந்த கொள்முதல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அந்தப் பகுதி விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா். அப்போது, அங்கிருந்த எடைபோடும் பணியாளா்கள் விவசாயிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதுடன், தரக்குறைவாகவும் பேசினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் எடைபோடும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல் கொள்முதல் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா்.

இதைடுத்து அங்கு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.