அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆதரவற்ற ஏழைகளுக்கு டிஎஸ்பி உதவி

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

News image
ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன்.
Updated On :7 ஜனவரி 2021, 1:57 am

DIN

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக விட்டுவிட்டும், தொடா்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், மழை காரணமாக போளூரில் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் உணவில்லாமல் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் புதன்கிழமை மதிய உணவு வழங்கினாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்தை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.