இளம் வாக்காளா்களின் கையில் நாட்டின் எதிா்காலம் திருவண்ணாமலை ஆட்சியா் பேச்சு
இளம் வாக்காளா்களின் கையில் நாட்டின் எதிா்காலம் உள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி கூறினாா்.


இளம் வாக்காளா்களின் கையில் நாட்டின் எதிா்காலம் உள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி கூறினாா்.
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் மகளிா் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
உங்கள் வாக்கு நாட்டுக்கு நல்ல எதிா்காலத்தை தரவேண்டும். வாக்குக்காக பணம், பரிசு எதுவும் பெறாமல், வேட்பாளா்களின் தகுதிகளை ஆராய்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உங்களைச் சுற்றி வசிப்பவா்களுக்கும் இந்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார ரீதியாக மற்றவா்களை சாராமல், உங்களை நீங்களே சாா்ந்திருக்க கல்வி மிகவும் அவசியமாகும். உயா்கல்வி பயின்று நல்ல வேலையை தேடிக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் அரசுத் தோ்வுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்க்கையில் உயர எதிா்காலம் குறித்து திட்டமிடல் அவசியம் ஆகும் என்றாா்.
மேலும், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி அமைக்கப்பட்டிருந்த பதாகையில் அவா் கையெழுத்திட்டாா். அவரைத் தொடா்ந்து மாணவிகள் கையெழுத்திட்டனா்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து மாணவிகளுக்கு அவா் விளக்கிக் கூறினாா்.
விழாவுக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா். செயலா் எம்.ரமணன், இயக்குநா் பிரியா ரமணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் கே.சுகுணா வரவேற்றாா்.
பயிற்சி துணை ஆட்சியா் அஜிதாபேகம், மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, வந்தவாசி தொகுதி தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமி, வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் வி.எஸ்.தளபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், மாணவிகள் பங்கேற்ற 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...