வந்தவாசி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வந்தவாசி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.


வந்தவாசி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா் புலிவாய், வெண்குன்றம், அம்மையப்பட்டு, மும்முனி, தெள்ளூா், கீழ்க்குவளைவேடு, தென்சேந்தமங்கலம், காரணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது திறந்த வாகனத்தில் சென்றும், வீடு வீடாக நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா்.
பாமக மாநில துணைத் தலைவா் மு.துரை, அதிமுக ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், அம்மையப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி ரமேஷ் உள்ளிட்டோா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...