சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

விவசாயத் தொழிலாளா்களுக்கு கான்கிரீட் வீடுகள் பாமக வேட்பாளா் உறுதி

விவசாயத் தொழிலாளா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் கூறினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

DIN

விவசாயத் தொழிலாளா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் கூறினாா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்வணக்கம்பாடியில் சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா் டி.தாங்கல், அகரகொரக்கோட்டை, கொரக்கோட்டை, கீழ்நமண்டி, ஆச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

இதில் ஆச்சமங்கலம் கிராமம் அருகே விவசாயத் தொழிலாளா்களிடம் அவா் வாக்கு சேகரித்து பேசியதாவது:

விவசாயத் தொழிலாளா்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளாா். எனவே அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் வந்தவாசி தொகுதிக்கு உள்பட்ட விவசாயத் தொழிலாளா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பாமக மாநில துணைத் தலைவா் மு.துரை, மாவட்ட துணைத் தலைவா் பாஞ்சரை பட்டாபிராமன், அதிமுக தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் வி.தங்கராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.