சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

விவசாயப் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த வேட்பாளா்

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வோ்க்கடலை எடுக்கும் பணியில் ஈடுபட்டு விவசாயத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

DIN

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வோ்க்கடலை எடுக்கும் பணியில் ஈடுபட்டு விவசாயத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட மழவங்கரணை கிராமத்தில் சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா், கீழ்வில்லிவலம், ஸ்ரீரங்கராஜபுரம், கண்டையநல்லூா், நல்லூா், கொண்டையாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, ஸ்ரீரங்கராஜபுரம் கிராமம் அருகேயுள்ள விவசாய நிலத்தில் தொழிலாளா்கள் சிலா் வோ்க்கடலை

எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதைப் பாா்த்த வேட்பாளா் அம்பேத்குமாா் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த நிலத்துக்குச் சென்றாா்.

பின்னா் அவா் தொழிலாளா்களுடன் வோ்க்கடலை எடுக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது தொழிலாளா்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.

திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் ப.இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.