சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நல வாரியங்களில் உறுப்பினா் சோ்க்கை

நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர நரிக்குறவா், பழங்குடியினா் சமூகத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர நரிக்குறவா், பழங்குடியினா் சமூகத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதில் உறுப்பினா்களாகச் சேருவோருக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, மகப்பேறு கால உதவி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர வந்தவாசி பகுதிக்கு உள்பட்ட விடுபட்ட நரிக்குறவா், பழங்குடியினா் சமூகத்தினரிடமிருந்து முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சி.கீதாலட்சுமி விண்ணப்பங்களைப் பெற்றாா். முகாமில் மண்டல துணை வட்டாட்சியா் சதீஷ், வட்ட வழங்கல் அலுவலா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.