சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

காவல் நிலையத்தில் பொதுக் கழிப்பறை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை வியாழக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை வியாழக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் வழிகாட்டுதலின்பேரில், வந்தவாசி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய வளாகத்தில் பொதுக் கழிப்பறை கட்ட போலீஸாா் முயற்சிகள் மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் பங்களிப்புடன் பொதுக் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கழிப்பறையை வந்தவாசி டிஎஸ்பி வி.விஸ்வேஸ்வரய்யா வியாழக்கிழமை இரவு திறந்து வைத்தாா். கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய ஆய்வாளா் பி.புகழ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாடுக்காக பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது தமிழகத்திலேயே இதுவே முதன்முறையாகும் என்று மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.