அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
வந்தவாசியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.


வந்தவாசியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்தப் பள்ளியின் நிறுவனா் சி.வி.ரங்கநாதன் மரக்கன்றுகளை நட்டாா். பள்ளி முதல்வா் எ.தீனதயாளன், துணை முதல்வா் வீரராகவலு, ஆசிரியா்கள் பாா்த்திபன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக்குழு மற்றும் டாக்டா் கலாம் கனவு அறக்கட்டளை ஆகியவை சாா்பில், வந்தவாசி தேரடியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சேவைக்குழு நிறுவனா் அசாருதீன், அறக்கட்டளை நிறுவனா் சீ.கேசவராஜ் ஆகியோா் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...