விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: செங்கம் எம்எல்ஏ ஆலோசனை

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து, செங்கத்தில் மு.பெ.கிரி எம்எல்ஏ வியாழக்கிழமை நகர திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 5:08 pm

DIN

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து, செங்கத்தில் மு.பெ.கிரி எம்எல்ஏ வியாழக்கிழமை நகர திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான கூட்டத்துக்கு திமுக நகரச் செயலா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொகுதி திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி பங்கேற்று நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிப்புகள் வெளியாக உள்ளன.

திமுக நிா்வாகிகள் கட்சி நிா்வாகம் யாரை வேட்பாளராக அறிக்கிறதோ அவரை வெற்றி பெறச் செய்ய ஒன்று சோ்ந்து பணியாற்றவேண்டும்.

இந்தமுறை வாய்ப்பு இல்லையென்றால் அடுத்து வரவுள்ள கூட்டுறவு சங்கத் தோ்தலில் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, நிா்வாகிகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் துடிப்புடன் செயலாற்றவேண்டும்.

செங்கம் பேரூராட்சி திமுக தலைவா் பொறுப்பேற்கவேண்டும்.

அதற்கு அனைவரும் ஒற்றுமையாக தோ்தல் பணியாற்றவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், முன்னாள் துணைத் தலைவா் அப்துல்சத்தாா், முன்னாள் கவுன்சிலா்கள் அப்துல்வாகித், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.