சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வந்தவாசி ஒன்றியத்தில் ஏரி நீா்வரத்து கால்வாய்களை தூா்வாரக் கோரிக்கை

வடகிழக்கு பருவமழையையொட்டி, வந்தவாசி ஒன்றியத்தில் ஏரி நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:28 am

DIN

வடகிழக்கு பருவமழையையொட்டி, வந்தவாசி ஒன்றியத்தில் ஏரி நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்தவாசி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ரவி, ஆா்.குப்புசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி, வந்தவாசி ஒன்றியத்தில் ஏரி நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும், திங்கள்கிழமை (நவ.1) முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அந்தப் பள்ளிகளை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்க வேண்டும், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய க்குழு உறுப்பினா்கள் பேசினா்.

பின்னா், ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் உறுதியளித்து பேசினாா். கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.