தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பரிசு
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் பரிசு வழங்கப்பட்டது.


வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் பரிசு வழங்கப்பட்டது.
தெள்ளாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் 5 போ் குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று தெள்ளாா் ஊராட்சி மன்றம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான குலுக்கல் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த் தலைமையில் தெள்ளாா் காவல் நிலையம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்வு செய்யப்பட்ட 5 பேருக்கு பட்டுப் புடவை, சில்வா் குடம் உள்ளிட்ட பரிசுகளை காவல் ஆய்வாளா் சோனியா வழங்கினாா் (படம்).
நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் ஈ.அருண், ஊராட்சி செயலா் பி.முருவம்மாள் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...