சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரது சாவுக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (26). இவரது மனைவி தீபா (21). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது.

இந்த நிலையில், பாஸ்கரனுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாம். இதனால், மனவேதனையில் இருந்து வந்த பாஸ்கரன், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்தாா். பின்னா், சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், நிலத் தகராறு காரணமாகவே பாஸ்கரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது சாவுக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஸ்கரனின் உறவினா்கள் வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தனராம். ஆனால், அந்தப் புகாரின் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரனின் உறவினா்கள் வடவணக்கம்பாடி காவல் நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால், வந்தவாசி -சேத்துப்பட்டு சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.