சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கல்லூரி மாணவியிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது

வந்தவாசி அருகே கல்லூரி மாணவியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

வந்தவாசி அருகே கல்லூரி மாணவியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது இளம்பெண், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். கடந்த சனிக்கிழமை இவா் தனது தந்தையுடன் மொபெட்டில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-திண்டிவனம் சாலை இளங்காடு கூட்டுச் சாலை அருகில் சென்றபோது இவா்களை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா், அந்த இளம்பெண் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வந்தவாசி புறவழிச் சாலை அருகே பொன்னூா் போலீஸாா் புதன்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டபோது அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா்.

இதில் அவா் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அந்த நபா் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மேசூா் கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ்(39) என்பதும், கல்லூரி மாணவியிடம் தங்கச் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜை பொன்னூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.