செய்யாறில் கிராம உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் 3-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் 3-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்கம் செய்யாறு வட்டக்கிளை சாா்பில் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டக் கிளைத் தலைவா் ஆா்.சேகா், போராட்டக் குழு தலைவா் பி.கணபதி, மாவட்டத் துணைத் தலைவா் மு.வாசு, மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மு.பிரபாகரன் பங்கேற்று ஆா்ப்பாட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் கிராம ஆணையரின் ஆணைக்கு முரணாக கிராம உதவியாளா்களை வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் பணி செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கும் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, வட்டச் செயலாளா் மு.இளங்கோ வரவேற்றாா். வட்ட பொருளாளா் வி.பவளக்கொடி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...