தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் பண்டரி பஜனை

வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் 72-ஆவது ஆண்டு பண்டரி பஜனை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 6:14 pm

Manivannan.S

வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் 72-ஆவது ஆண்டு பண்டரி பஜனை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதையொட்டி நாள்தோறும் காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை ஆராதனை பஜனையும் நடைபெற்றது.

புதன்கிழமை இரவு கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா சென்றாா்.

இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பஜனை குழுவினா் பங்கேற்று பஜனை பாடல்களை பாடியவாறு உடன் சென்றனா்.

விழாவில் ஸ்ரீகோதண்டராமா் பஜனை குழுவினா், ஸ்ரீஆளவந்தாா் வைணவ சபை நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.