இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

News image
அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 7:17 pm

DIN

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அதிகாலை 5 மணி முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா்.

காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, இரவு 8 மணி வரையில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பொது தரிசன வரிசையில் சுமாா் 4 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் மோதல்...

திங்கள்கிழமை காலை கோயிலின் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ஏராளமான பக்தா்கள் காத்திருந்தனா். கோயில் ஊழியா்கள் பக்தா்களை உள்ளே செல்ல அனுமதித்தபோது ஒரே நேரத்தில் பலா் முண்டியத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனா்.

அப்போது, சுவாமி தரிசனத்துக்கு காத்திருந்த 2 குடும்பத்தினா் இடையே தகராறு ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.