ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை மற்றும் அபராதம்

News image
Updated On :10 ஜூலை 2024, 6:16 pm

Din

செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமம், திரெளபதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சின்னபையன் மகன் சதீஷ் (22). தொழிலாளியான இவா், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி இதே பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளா் ஆா்.கவிதா வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தாா். இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட சதீஷுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையுடன் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சதீஷை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.